சீதா ராமன் அப்டேட்: உயிருக்கும் போராடும் சத்யன்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் மகா

Seetha Raman Today's Episode Update: உயிருக்கும் போராடும் சத்யன்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் மகா, மீரா எடுத்த முடிவு - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2023, 10:15 AM IST
  • தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.
  • தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது.
  • அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் அப்டேட்: உயிருக்கும் போராடும் சத்யன்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் மகா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சத்யன் மீது விஷால் ஜீப்பை ஏற்றிய நிலையில் இந்த விஷயம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

ரெஜிஸ்டர் ஆபிசில் இருந்து மீரா, சீதா, ராம் ஆகியோர் வருவதற்குள் யாரோ சத்யனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட கடைசியில் அது விஷால் மற்றும் அவனது அப்பா என தெரிய வருகிறது, ஹாஸ்பிடலுக்கு வந்த விஷால் டாக்டரிடம் இவனை காப்பாற்றுங்க, இவன் பிழைத்தால் தான் என் கல்யாணம் நடக்கும் என்று கத்தியை காட்டி மிரட்ட விஷாலின் அப்பா சூழ்நிலையை சமாளித்து விஷாலை அமைதியாக்குகிறார். 

சீதா, ராம் மற்றும் மீரா ஆகியோர் ஹாஸ்பிடலுக்கு ஓடி வர விஷாலும் அவனது அப்பாவும் மறைந்து கொள்கின்றனர். டாக்டரிடம் வந்து சத்யன் நிலை குறித்து விசாரிக்க ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன் தான், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்ல மீரா எனக்கு இந்த கல்யாணம் கூட வேண்டாம் அவர் உயிர் பிழைத்தால் போதும், அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்று துடிக்கிறாள். 

மேலும் படிக்க | 27 ஆண்டுகளாக வாடகை வீடு..! சொந்த வீட்டுக்கு செல்லும் முன் உயிரிழந்த சோகம்

சீதாவும் ராமும் மீராவை சமாதானம் செய்ய முயற்சிக்க மறுபக்கம் மகா சத்யன் உயிருக்கு போராடுவதை கொண்டாட வேண்டும் என திட்டம் போடுகிறாள், சீதா கடத்தி வைத்திருந்த மூன்று பெண்களும் வீட்டிற்கு வந்து அந்த சீதாவை வீட்டிற்குள்ளவே விட கூடாது என நடந்ததை சொல்லி மகாவை ஏற்றி விட மகா அவளை வெளியே அனுப்பாமல் இங்கேயே வச்சு கொடுமை படுத்தனும் என்று சொல்கிறாள், வேலைக்காரி செல்வியிடம் அல்வா செய் நாங்க இந்த சந்தோசத்தை கொண்டாடணும் என ஆர்டர் போடுகிறாள். 

இங்கே மீரா சத்யனுடனான நினைவுகளை நினைத்து பார்த்து இனியும் உயிர் வாழ கூடாது என தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஹாஸ்பிடல் மாடிக்கு ஓடி செல்கிறாள். ராம் மற்றும் சீதா மீரா காணாமல் போனதால் அவளை தேடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News