அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம்.. வீட்டை விட்டு வெளியேறிய அமுதா

Amudhavum Annalakshmiyum: வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம்.. வீட்டை விட்டு வெளியேறிய அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 5, 2023, 11:48 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலு காலில் விழுந்த சிதம்பரம்.. வீட்டை விட்டு வெளியேறிய அமுதா title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிதம்பரம் அன்னத்திடமும் வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு அமுதா வீட்டிற்கு வர அப்பா மன்னிப்பு கேட்ட விஷயம் தெரிந்து கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். 

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

அமுதா கோபத்துடன் வந்து சாமியை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க, செந்தில் மாமாவுடன் வந்து அமுதாவை வீட்டுக்கு வரச்சொல்ல, அதை அமுதா மறுக்கிறாள். அத்தை என்னை விட்டுக் கொடுத்து விட்டார்கள் அதையும் தாண்டி வடிவேல் காலில் எங்கப்புச்சி விழும்போது எப்படி அதை அனுமதிச்சாங்க என வருத்தத்துடன் சொல்கிறாள். 

அன்னம் அமைதியாக என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, வடிவேல் அம்மா நீ அண்ணி வீட்டைவிட்டு போனதற்காக ரொம்ப வருத்தப்படுறனு எனக்கு தெரியும், என்னால நம்ம வீட்டுல பிரச்சனை வந்துறகூடாது அதுக்காக நான அண்ணியிடம் போயி மன்னிப்பு கேட்டு கூட்டி வரேன் என சொல்லி நடித்து கிளம்புகிறான்.

வடிவேல் அமுதா இருக்கும் இடத்திற்கு வந்து அவளிடம் நக்கலாக கோபத்துல இங்க வந்து உட்கார்ந்துட்டா உங்கப்புச்சி பட்ட அவமானம் சரியா போயிடுமா? என்னைய அடிச்சி அவமான படுத்துன அந்த ஆள எப்படி என் காலுல விழ வைச்சேன் பாத்தியா என நக்கலாக பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC புகழ்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News