ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவதே என் லட்சியம்: வைகோ!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவதே என் லட்சியம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்!  

Last Updated : Apr 26, 2018, 12:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவதே என் லட்சியம்: வைகோ! title=

12:20 26-04-2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவதே என் லட்சியம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை வழக்குக்காக உயர்நீமன்ற மதுரை கிளையில் ஆஜரான பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்காத ஸ்டெர்லைட் ஆலையை ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 17 இடங்களில் பொதுமக்கள் நேற்று 72-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். 

இம்மனு தொடர்பாக விசாரணைக்கு மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆஜராகியுள்ளார். 

Trending News