கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கலவி கற்க செல்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வி, வலுவான உள்கட்டமைப்பு, அதிநவீன பாடத்திட்டங்கள், பரந்து விரிந்த வளாகங்கள் என கண்டா கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் சிறந்த தேர்வாக திகழ்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல மாணவர்கள், கனடாவில் உள்ள கல்லூரிகளில் கல்வியை தொடர படிப்பிற்கான அனுமதி பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். கனடா மாணவர் விசா மற்ற நாடுகள் வழங்கும் மாணவர் விசாவிலிருந்து வேறுபட்டது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது. அதற்கு, உங்கள் விசாவுடன் உங்களுக்கு படிப்பு அனுமதி (Study Permit) தேவைப்படும். எளிமையாகச் சொன்னால், மாணவர் விசா என்பது நாட்டிற்குள் நுழைவதற்கான அங்கீகாரம். படிப்பு அனுமதி நீங்கள் அங்கே தங்கி படிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.
விசா மற்றும் படிப்பிற்கான அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகள் எளிமைபடுத்தப்படும் என ஐஆர்சிசி எனப்படும் கனடா குடியுரிமை துறையிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது நம்பிக்கை அளிப்பதாக கூறபட்டது. சமீபத்திய அறிவிப்பு ஒரு நேர்மறையான நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், இது களத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மாணவர் விசா பெற நீண்ட காலமாக காத்திருக்கும் நிலையில், கால தாமதம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | UAE: எண்ட்ரி விசா வழிமுறைகளில் மாற்றங்கள், விவரம் இதோ
கனடாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கும் வளாக வகுப்புகளில் சேர இன்னும் பலருக்கு விசா கிடைக்கவில்லை. ஒரு சில கல்வி நிறுவனங்கள் வகுப்பில் சேரும் தேதியை 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளன.
2022, ஜூன் மாதத்தில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவால் உருவாக்கப்பட்ட கனடாவின் மத்திய மந்திரி பணிக்குழுவின் அறிவிப்பு, குடியேற்ற சேவைகளில் தாமதங்களைக் குறைப்பது உட்பட அரசாங்க சேவைகளை மையமாகக் கொண்டது. பல்கலைக்கழகங்களில் சேர விசாக்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் இந்த குழு அமைக்கும் முடிவை பெரிது வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ