16 நாட்களில் கும்பத்தில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Shani Rashi Parivartan 2023: புத்தாண்டு அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புத்தாண்டின் தொடக்கத்தில், சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசியில் பெயரச்சியாகுகிறார். இரவு 8:02க்கு இந்த பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் எந்த ராசிக்கு சனி பகவான் சாதகமான பலனை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், இருப்பினும் சில நாட்களுக்கு சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், இதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். சனியின் தாக்கத்தால் வெளிநாட்டவர்களுடன் வியாபாரம் செய்வீர்கள்.  

2 /6

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், ஆனால் மாதத்தின் இடையில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். மாதத்தின் இறுதியில் எடுக்கும் முடிவுகள் வியாபாரத்திற்கு பலன் தரும்.  

3 /6

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பம் சிறப்பாக அமையும். இந்த வருடம் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஆனால் நடு பகுதியில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மாதத்தின் இறுதியில், மீண்டும் உங்கள் பக்கம் வெற்றி அலை வீசும்.  

4 /6

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.  

5 /6

மகர ராசி: மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக வெற்றியைப் பெறுவார்கள், ஆனால் இந்த வெற்றியைப் பெற நீங்கள் இரவும் பகலும் உழைக்க வேண்டியிருக்கும். ஜூலை மாதம் வரை தொழில் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.  

6 /6

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சில வாய்ப்புகளை தரும். வியாபாரத்தில் வளர்ச்சி சாத்தியம், ஆனால் எந்த பிரச்சனையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும்.