எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவு 100க்குள் தான் இருக்க வேண்டும், அதன் அளவு 130க்கு மேல் இருந்தால் இதயம் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற நார்சத்து மிகுந்த பழங்களை சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
நட்ஸ் வகைகள் மற்றும் சில விதைகளை உங்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், அதிகப்படியான மது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்துவிடும்.