மோட்டோரோலா G34 5ஜி: பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் 5ஜி மொபைல்! - ஸ்பெஷல் இதுதான்

மோட்டோரோலா 5ஜி மொபைல் இப்போது மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. எக்ஸ்சேஞ்சில் வாங்கினால் உடனடியாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி. 

 

1 /8

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போனான மோட்டோ G34 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மோட்டோ G32 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.  

2 /8

மோட்டோ G34 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.  

3 /8

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். கொண்டிருக்கும் மோட்டோ G34 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, PDAF, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 3.5mm ஆடியோ ஜாக், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.  

4 /8

மோட்டோ G34 5ஜி மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.   

5 /8

இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் ஐஸ் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.  

6 /8

மொபைலின் கேமராவின் சிறப்பம்சம் என்னவென்றால், மோட்டோ G34 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. இந்த கேமராக்கள் நல்ல தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவும்.  

7 /8

மொத்தத்தில், மோட்டோ G34 5ஜி மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். இது சிறந்த அம்சங்கள், கவர்ச்சிகரமான விலை மற்றும் நீண்ட பேட்டரியை வழங்குகிறது.  

8 /8

மோட்டோ G34 5ஜி மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது சிறந்த அம்சங்கள், கவர்ச்சிகரமான விலை மற்றும் நீண்ட பேட்டரியை வழங்குகிறது.