India vs Sri Lanka T20I Series 2023: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி-20 போட்டி நாளை (ஜனவரி 3) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.
IND vs SL 1st T20: இலங்கை எதிரான தொடரில் இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இந்த தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். நன்றாக விளையாடும் வீரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டயத்திக் ஐந்து வீரர்கள் உள்ளனர. அவர்கள் குறித்து பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சீரற்ற ரன் எடுத்துள்ளார். அதாவது சில போட்டிகளில் நன்றாகவும், சில போட்டிகளில் சொதப்பியும் உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்குப் பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இஷான் கிஷானுக்கும் சாம்சனுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.
ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் காட்டும் திறமையை இன்னும் டி20 கிரிக்கெட்டில் போட்டிகளில் சரியாக நிரூபிக்கவில்லை. ரவீந்திர ஜடேஜாவுக்கு சவாலாக அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அக்சர் விரைவாக திறமையை காட்ட வேண்டும்.
இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆல்-ரவுண்டர் ஹர்ஷல் படேல் சில சர்வதேச போட்டிகளில் மட்டும் தான் விளையாடி உள்ளர. எனவே இந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. தனது பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்,.
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, இலங்கை அணியில் தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் அணிக்கு பானுகா ராஜபக்சே பக்கபலமாக இருந்தார. அதன்பிறகு அவர் சரியாக விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான டி20ஐ தொடரில் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த தொடர் தனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்.