மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படி வடிவில் வரவுள்ள அதிரடி

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடிய விரைவில் பல பெரிய பரிசுகளை வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. 

இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். 

 

1 /8

வரும் மாதங்களிலும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. இவை அவர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும். அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு ஆகியவை அடிப்படைச் சம்பளத்தில் நல்ல உயர்வுக்கு வழிவகுக்கும். 

2 /8

நிலுவையில் உள்ள டிஏ பாக்கி பணத்தையும் அரசு கணக்கில் டெபாசிட் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் என நம்பப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

3 /8

மோடி அரசு விரைவில் டிஏ -வை (DA) 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாகவும், அது 5 சதவிகிதம் அதிகரித்தால் 51 சதவிகிதமாகவும் உயரும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏற்றமாக இருக்கும். எனினும் இதன் முடிவு டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வந்தவுடன் நிர்ணயிக்கப்படும்.

4 /8

தற்போது ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் 46 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.  46% அகவிலைப்படி ஜூலை 2023 முதல் அமலில் உள்ளது

5 /8

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.   

6 /8

ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும்.   

7 /8

சில நாட்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரியில் அல்லது மார்ச் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கு முன், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை (DA Hike) அறிவிக்கலாம், இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 /8

கடந்த சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வரும் மாதங்களிலும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன.