8th Pay Commission: மிக விரைவில் அரசாங்கம் 8வது ஊதியக்குழு குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: லெவல் 1 ஊழியர்களின் ஊதிய உயர்வு 34% வரையும், லெவல் 18 ஊழியர்களுக்கு 100% வரையும் இருக்கலாம் என்றும், லெவல் 1-ன் சம்பளம் ரூ. 34,560 வரையிலும், லெவல் 18-ன் சம்பளம் ரூ.4.8 லட்சம் வரையிலும் அதிகரிக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டிற்குள் 50% ஓய்வூதிய சூத்திரம் மற்றும் 20% அகவிலைப்படி அதிகரிப்பு (Dearness Allowance) என கருதினால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி மாதச் சம்பளத்தில் 50 சதவீதம் UPS-ன் கீழ் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும். லெவல் 1 ஊழியர்களுக்கு தோராயமாக ரூ.20,736 ஓய்வூதியம் கிடைக்கும்.
சமீபத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு பதிலாக மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனப்படும் UPS -ஐ கொண்டு வந்தது. மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்தது. அடுத்ததாக 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வருமா என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவிற்கான கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். ஆனால், இன்னும் அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனினும், மிக விரைவில் அரசாங்கம் இது குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், இதற்கான ஆயத்தப்பணிகளை அரசு தொடங்கிவிட்டதாக ஒரு சாரார் நம்புகிறார்கள்.
7வது ஊதியக் குழு 2014 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது, அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. இந்த பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும். ஆகையால், 8வது ஊதியக் குழுவானது 2026 ஜனவரியில் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மோடி அரசு 2025-26ல் 8வது ஊதியக் குழுவை 10 ஆண்டு கால முறைப்படி அமல்படுத்தினால், ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். ஊதியக்குழுவை அமல்படுத்த சுமார் 1 1/2-2 ஆண்டுகள் ஆகும் என்பதால், இப்போது இதற்கான அறிவிப்பு வந்தால்தான், இதை 2026 -இல் அமலுக்கு கொண்டுவர முடியும்.
லெவல் 1 ஊழியர்களின் ஊதிய உயர்வு 34% வரையும், லெவல் 18 ஊழியர்களுக்கு 100% வரையும் இருக்கலாம் என்றும், லெவல் 1-ன் சம்பளம் ரூ. 34,560 வரையிலும், லெவல் 18-ன் சம்பளம் ரூ.4.8 லட்சம் வரையிலும் அதிகரிக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்கானால், மாத சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது சுமார் 44% ஏற்றம் இருக்கும்..
டந்த மாதங்களில் 8வது ஊதியக்குழு தொடர்பாக பல ஊழியர் அமைப்புகள் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடரில், எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரி, பணியாளர்கள் கூட்டமைப்பு, தேசிய கூட்டு ஆலோசனை அமைப்புகள், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் அமைப்புகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தன.
பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைப் பற்றி பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ஊழியர்கள் நம்பினர், ஆனால் அது நடக்கவில்லை. எனினும், சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து கருத்து தெரிவித்த நிதிச்செயலர் டிவி சோமநாதன், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டுதான் அமலுக்கு வர வேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதென்றும் கூறினார். இது 8வது ஊதியக்குழுவை அமைக்க அரசாங்கம் முனைப்புடன் இருப்பதையே காட்டுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.