Trisha Krishnan Net Worth 2024: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரும் நடிகை த்ரிஷா, தற்போது 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்தவகையில் எப்போதுமே எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவின் 2024ல் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், அஜித்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா, கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ படத்திலும், மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ படத்திலும், நிவின்பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ படத்திலும், நடிகர் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார்.
முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இவர் விளம்பர படங்கள் மூலம் வருடத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பாதித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
ரூ. 7 கோடி மதிப்பில் சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. மேலும் ஹைதராபாத்தில் த்ரிஷாவிற்கு ரூ. 6 கோடி மதிப்பில் பெரிய பங்களா ஒன்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
த்ரிஷாவிடம் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் உள்ளது.