வரலக்‌ஷ்மியின் வருங்கால கணவர் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? முழு விவரம்!

Varalaxmi Sarathkumar Boyfriend Nicholai Sachdev : சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மிக்கு சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Varalaxmi Sarathkumar Boyfriend Nicholai Sachdev : தமிழ் திரையுலகில் முக்கிய நாயகியாக இருப்பவர், வரலக்‌ஷ்மி. சரத்குமாருக்கும், சாயாவிற்கும் பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது. போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக இவர் நடித்த ‘ஹனுமன்’ படம் வெளியானது. இந்த நிலையில்தான் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானது. இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் யார்? இங்கே பார்ப்போம். 

1 /7

சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு மார்ச் 1ஆம் தேதியன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இவருடைய வருங்கால கணவர், தலையில் அதிகமான முடியுடனும் கட்டுமஸ்தான உடலுடனும் காணப்பட்டார். இதனால் ரசிகர்கள், ‘யார் இவர்’ என தேட ஆரம்பித்தனர். 

2 /7

வரலக்‌ஷ்மி திருமணம் செய்து கொள்ள இருபவரின் பெயர், நிக்கோலாய் சாக்தேவ் ஆகும். இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போதுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

3 /7

நிக்கோலாய் சாக்தேவ், ஆர்ட் கேலரி நடத்துபவர் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, சில செலிப்ரிட்டிகளுக்கு பர்சனல் புகைப்பட கலைஞரகாவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

4 /7

நிக்கோலாய் சாக்தேவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், இவருக்கு 15 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்த பின்னர்தான் வரலக்‌ஷ்மியை நிக்கோலாய் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

5 /7

வரலக்‌ஷ்மியின் நிச்சயதார்த்தத்தில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். 

6 /7

வரலக்‌ஷ்மியின் வருங்கால கணவருடன் சரத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம்

7 /7

நிக்கோலாய் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.