Amla Benefits : உடல் எடை குறைப்பு to சரும பளபளப்பு-நெல்லிக்காயின் பயன்கள்!

Amla Benefits : உடலுக்கு பல்வேறு நன்மை தரும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இதை சாப்பிடுவதால் என்னென்ன உடல் நலன்கள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்!

Amla Benefits : நெல்லிக்காய்க்கு, Indian Gooseberry என்ற பெயரும் உள்ளது.  இந்த பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகளும் இருக்கின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, அஜீரண கோளாறுகளை நீக்குவதற்கு என பல்வேறு உடல் நலக்கோளாறுகளை தீர்ப்பதற்காக நெல்லிக்காயை நாம் உபயோகிக்கிறோம். இதில் இருக்கும் பிற நலன்களை இங்கு பார்ப்போம். 

1 /8

நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மை ஏற்படும் என்பது பலருக்கு தெரியும். அதில், குறிப்பாக இருக்கும் சில நலன்கள் குறித்து இங்கு பார்கலாமா?

2 /8

உடல் எடை குறைப்பு: நெல்லிக்காயில் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கின்றன். இதனால், இதை சாப்பிட்டவுடன் நமக்கு வயிறு முழுமையான உணர்வு கிடைத்துவிடும். இதனால் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் இருந்தும் நாம் தப்பிக்கலாம். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம். 

3 /8

வைட்டமின் சி: வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இதனால் உடலில் காலிஜன் உற்பத்தி அதிகரித்து முக்கியமான உடல் பாகங்களுக்கு நன்மை பயக்கிறது. 

4 /8

சரும பராமரிப்பு: நெல்லிக்காயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், சருமத்தில் சுருக்கம் வருவதையும், சீக்கிரமே வயதானது போன்ற தோற்றம் ஏற்படுத்துவதையும் தவிர்க்கிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் பளபளப்பாகவும் மாறுகிறது. 

5 /8

இதயத்திற்கு நல்லது: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இது, உடலில் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பை சேர விடாமல் தடுக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கு நன்மை பயக்கிறது.

6 /8

செரிமானம்: வயிற்றுக்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது நெல்லிக்காய். மலச்சிக்கல் பாதிப்பையும் நெல்லிக்காய் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, குடல் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது.

7 /8

நோயெதிர்ப்பு சக்தி: நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், உடல் நோய் கிருமிகளை எதிர்த்து போராட தயாராகிறது. 

8 /8

ரத்த சர்க்கரை அளவு: நெல்லிக்காயில் குரோமியம் சக்தி உள்ளது, இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. மேலும் இன்சுலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கிறது.