நீரிழிவு முதல் உடை இழப்பு வரை; மாயங்கள் செய்யும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெள்ளரிக்காய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

1 /5

2017 ஆம் ஆண்டு ஆய்வின்படி, வெள்ளரிக்காய் சாறு குடித்தவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்டிருந்தனர். உயர் இரத்த அழுத்தம் உள்ள 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 20 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்  என்பது தெரியவந்துள்ளது.

2 /5

வெள்ளரிக்காயை பகலில் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து போதுமானதாக இருக்கும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம். இது நீரிழப்பைத் தடுக்கிறது.

3 /5

நீரிழிவு நோயாளிகளுக்கு வெள்ளரி நல்லது. நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் தடுக்கவும் வெள்ளரி உதவுகிறது.

4 /5

அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய் சாப்பிடுவது எடை அதிகரிப்பைத் தடுக்கிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.  

5 /5

உடல் எடையை குறைக்க உதவுகிறது: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று வெள்ளரி.