Health Benefits of Pomegranates: மாதுளை பழம் நாம் எடுத்துகொள்ளும் சிறந்த உணவுகளில் ஒன்று. நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த மாதுளையில் கலோரியும் கொழுப்பும் குறைவாக உள்ளது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறையும்.
மாதுளை பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், பிராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கிறது. மேலும், இதில் வைட்டமின் சி, நார்சத்து, பொட்டாஷியம் ஆகியவையும் உள்ளது.
மாதுளையில் உள்ள பாலிஃபினால் கலவைகள், இதய தமனி சுவர்கள் தடிமன் ஆவதை தடுக்கிறது. அதோடு கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை வலுப்படுக்கிறது. கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதனால் மாதுளையை தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரெட் ஒயினை விட அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட மாதுளை, நுரையீரல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எலும்புகளை வலுப்படுத்தும் திறன் கொண்ட மாதுளை வீக்கத்தை குறைக்கும் மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி கீ்ல்வாதம் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடலை காக்கிறது.
மலச்சிக்கல் கவனிக்கப்படாமல் இருந்தால், பைல்ஸ் போன்ற பலவேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நார்ச்சத்து நிறைந்த மாதுளை மலச்சிக்கலை போக்கி, பைல்ஸ் நோயையும் குணப்படுத்துகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமானத்தை வலுப்படுத்தும் திறன் மாதுளையில் உள்ளது.
பழங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளம் பழம் மிக நல்லது. மாதுளம் சாறுக்கு பதிலாக, மாதுளை விதையுடன் சேர்த்து நின்று சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் கட்டுப்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.