Health Tips: அரிசி உணவில் இத்தனை நன்மைகளா..!!

உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்து. ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாகும்.

1 /5

அரிசி ஒரு பிரோபயாட்டிக் தானிய உணவு. அரிசி உணவுகள் செரிமானத்திற்கு வலுசேர்ப்பதோடு, வயிற்று பிரச்சனைகளின் போது சாப்பிட சிறந்த உணவாக கருதப்படுகிறது

2 /5

அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. எனவே இது பசி உணர்வை கட்டுப்படுக்கிறது என்பதால் உடல் எடையை குறைப்பதிலும் உதவுகிறது

3 /5

தென்னிந்தியர்களான நமக்கு எவ்வளவு விதவிதமாக மற்ற நாட்டு, பிராந்திய வகை உணவுகளை சாப்பிட்டாலும், கைப்பிடியளவாவது சாதம் சாப்பிட்டால் மட்டும் தான் திருப்தி ஏற்படுவதாக, பலரும் கூறி வருகின்றனர்.

4 /5

அரிசியை எல்லா விதமான  பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

5 /5

அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்று பிரபலங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணராக மற்றும் ஆலோசகராக இருக்கும் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.