In Pics: பனிப் போர்வைக்குள் மூழ்கிய இமயமலைக்கு சுற்றுலா போகலாமா...!!

ரத்தத்தை உறையச் செய்யும் குளிர் என்றாலும், பனி போர்வை போர்த்திய  அழகிய இமயமலை சுற்றுலாப் பயணிகளுக்கு, உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

1 /5

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கிலும் திங்கள்கிழமை (டிசம்பர் 6) புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான குல்மார்க் இந்தியாவின் சிறந்த பனிச்சறுக்கு இடமாகும், மேலும் இந்த இடம் உலகம் முழுவதும் பிரபலமானது. (படம்: IANS)

2 /5

உறைபனியாக இருந்தாலும் பனிப்பொழிவு காஷ்மீரில் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள சோனாமார்க்கில் திங்கள்கிழமை (டிசம்பர் 6, 2021) லேசான பனிப்பொழிவுக்குப் பிறகு பனி மூடிய மைதானத்தில் பயணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். (படம்: PTI)

3 /5

உத்தரகாண்டில் கேதார்நாத், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இமயமலைக் கோயில்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. திங்கட்கிழமை நிலவரப்படி, பத்ரிநாத்தில் பனி ஒரு அடி உயரத்தில் இருந்தது. நந்தா தேவி தேசிய பூங்கா, பூக்களின் பள்ளத்தாக்கு மற்றும் கேதார்நாத் கஸ்தூரி மான் பூங்கா ஆகியவையும் பனியால் மூடப்பட்டிருந்தன. (படம்: ANI)

4 /5

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா உட்பட திங்கள்கிழமை (டிசம்பர் 6) பனிப்பொழிவு ஏற்பட்டது. லாஹவுல்-ஸ்பிதியின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், கீலாங் மாவட்டம் பனியின் அடர்த்தியான போர்வையின் கீழ் மூடப்பட்டிருந்தது. (படம்: ANI)

5 /5

இது சுவிட்சர்லாந்தா என வியக்கும் அளவிற்கு இந்தியாவில் லாஹவுல்-ஸ்பிதியில் உள்ள ரஷேல் கிராமம் தொடர்ந்த பனிப்பொழிவின் காரணமாக பனியால் மூடப்பட்டுள்ளது. (படம்: ANI)