வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 50 வயது தாண்டிலே, சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, வயதான தோற்றம் உண்டாக தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 50 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் பளபளப்பாகவும் இளமையாக இருக்க சில கொலாஜன் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும். 

Anti Aging Foods: ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, முதுமையின்அறிகுறியாக,  சருமத்தில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி,  போன்ற  பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கிறது.  இந்நிலையில், முதுமையை விரட்ட உதவும் சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /10

Anti Aging Foods: வயது அதிகரிக்கும் போது, ​​சருமத்தில் சுருக்கங்கள், மற்றும் மெல்லிய கோடுகள் தோன்றத் தொடங்கும். நம் உடலில் கொலாஜன் என்னும் புரதத்தில் உறப்த்தி குறைவதால் இது நிகழ்கிறது. இந்நிலையில், கொலாஜன் உற்பத்தியை தூண்டும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

2 /10

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம், சரும செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து, சுருக்கங்களை நீக்குகிறது. கூந்தலைலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை, சருமத்தை உள்ளிருந்து ஊட்டமாக வைத்திருக்கும்.

3 /10

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதோடு, கொலாஜன் இழப்பையும் தடுக்கிறது. 

4 /10

குடைமிளகாயில், கொலாஜன் உற்பத்தியை தூண்டு ஆற்றல் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி இதற்கு காரணம். ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து கொலாஜனைப் பாதுகாத்து, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 

5 /10

6 /10

பூண்டு கொலஸ்ட்ராலை எரிக்கும் திறன் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சல்பர் சத்து அதிகம் உள்ள பூண்டு, உடலில் கொலாஜன் புரத உற்பத்தியை அதிகரிப்பதோடு, கொலோஜன் சத்து இழக்காமலும் பாதுகாக்கிறது என்பது பலருக்கு தெரியாது.  

7 /10

தக்காளியில் உள்ள லைகோபீன் சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை போக்குகிறது. தக்காளி கொலாஜனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வயது காரணமாக சேதமடைந்த சருமத்தையும் குணப்படுத்துகிறது.

8 /10

முருங்கையில் உள்ள குளோரோபில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் சுருக்கம் ஏற்ப்டாமல் தடுத்து, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

9 /10

மீன் உணவுகள்: ஒமேகா 3 கொழுப்பு என்னும் ஆரோக்கிய கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களான, மீன் உணவுகள், சருமத்தின் சுருக்கங்களை போக்கி மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.