இவர்கள்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்?

எந்தவொரு விளையாட்டின் ஆரோக்கியத்திற்கும் வலுவான தொடர்ச்சி முக்கியமானது. இந்திய கிரிக்கெட் அமைப்பைப் பொறுத்த வரையில், எப்போதும் ஒரு அடி முன்னே தான் இருக்கும். அடுத்த தலைமுறை திறமைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மேலாளர்கள் அறிவார்கள். வருங்கால இந்திய அணியின் தூண்களாக இருக்க போகும் இளம் வீரர்கள்:

 

1 /5

யாஷ் துல் (19 வயது) U19 அணியின் கேப்டனாக இருந்த கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார் யாஷ் துல்.  மேலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ராஞ்சி கோப்பையில் இரண்டு இன்னிங்சிலும் சதம் (113,113*) அடித்து அசத்தியுள்ளார்.

2 /5

ஷாருக் கான் (26 வயது) தமிழ்நாட்டை சேர்ந்த ஷாருக் கான் இந்திய கிரிக்கெட்டில் மிக பெரும் சக்தியாக உருமாரி வருகிறார்.  சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.  ஐபிஎல் ஏலத்தில் 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.  கடந்த சீசனின் சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப் போட்டியில், கர்நாடகாவுக்கு எதிரான கடைசி பந்தில் தமிழகத்தின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாருக் சிக்ஸர் அடித்து தனது அணியை பட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

3 /5

சகிபுல் கனி (22 வயது) பீகார் அணிக்காக விளையாடும் சகிபுல் கனி, ரஞ்சி டிராபி குரூப் போட்டியில் 341 ரன்களை அடித்து முதல் தர அறிமுகத்தில் அதிக தனிநபர் ஸ்கோருக்கான உலக சாதனையை படைத்தார்.  சகிபுல், 405 பந்துகளில் 56 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 341 ரன்கள் குவித்து, 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 267 ரன்கள் எடுத்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் ரோஹராவின் சாதனையை முறியடித்தார்.

4 /5

கேஎஸ் பாரத் (28 வயது) இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்தை பிடிப்பது அவ்வளவு எளிது அல்ல. பந்த் அந்த இடத்தை நிரப்பிவிட்டார் என்று கூறினாலும் முழு நேர விக்கெட் கீப்பர் அணிக்கு தேவைப்படுகிறார்.  அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான கோனா ஸ்ரீகர் பாரத் உள்ளர்.  சமீபத்திய ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அவரை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது, இது அவரது அடிப்படை விலை பத்து மடங்கு அதிகம்.

5 /5

ராஜ் அங்கத் பாவா (19 வயது) U 19 உலகக் கோப்பையில் கிடைத்த மற்றொரு முக்கிய வீரர் ராஜ் அங்கத் பாவா.  இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை (5-31) வீழ்த்தி இந்தியாவை பட்டத்துக்கு அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.