ஏசியில் நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரும்!

வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் இரவில் ஏசியில் தூங்குகின்றனர். இருப்பினும், இரவு முழுவதும் ஏசியில் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

 

1 /6

ஏசியில் நீண்ட நேரம் தூங்குவது உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், சருமத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.   

2 /6

ஏசியில் தூங்குவது சருமம் மற்றும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். ஏசியில் நீண்ட நேரம் தூங்குவது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

3 /6

இரவு முழுவதும் ஏசியில் தூங்கினால் சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.   

4 /6

ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சுவாச மண்டலத்தில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இருமல், மூச்சுத்திணறல்,சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

5 /6

ஏசியில் தூங்குவது தூக்க முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும். தூக்கத்தை சீர்குலைத்து மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.  

6 /6

ஏசியில் தூங்கும் போது நிலையான தூக்கம் கிடைக்கப்பதில்லை. தூங்கும் போது அசௌகரியம் மற்றும் அடிக்கடி விழிப்புணர்வை ஏற்பட கூடும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பது சிரமம் ஆகும்.