Kia Carens: அற்புதமான அம்சங்கள், அழகான வடிவமைப்பு

கியா கேரன்ஸ், 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி ஆகும். இது இந்தியாவில் அறிமுகம் ஆனவுடன் வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் மலிவு விலை கார் இது. இந்த காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாறுபாடுகளில், வாடிக்கையாளர்கள் சுமார் 1 வருடம் காத்திருக்க வேண்டிய நிலை கூட உள்ளது. கியா கேரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 13 முதல் 49 வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் வழங்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த ஒரு ஆவணத்தின்படி, கேரன்ஸின் கே1.4 6எம்டி லக்ஸரி பிளஸ் 7 வகைக்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 13-14 வாரங்களும், ஜி1.5 6எம்டி ப்ரெஸ்டீஜ் மாறுபாட்டிற்கு 48-49 வாரங்களும் வழங்கப்படுகின்றன. பார்க்க அழகாக இருக்கும் 3 வரிசை காரை ரூ.8.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 /5

இந்த விலையில், மாருதி சுஸுகி எர்டிகாவுடன் Kia Carens-2ன் நேரடி போட்டி தொடங்கியுள்ளது.  

2 /5

கியா இந்தியா தனது புதிய 7-சீட்டர் MPVயை உள்ளேயும் வெளியேயும் மிகவும் அழகாக வடிவமைத்துள்ளது.  

3 /5

கேரன்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அளவுகளில் இது மிகப்பெரியது. 

4 /5

கியா செல்டோஸின் இண்டீரியர் பிரீமியம் வகையை சேர்ந்தது. இந்த தொகை இந்த காருக்கு ஏற்ற விலை என்பதை இது நிரூபிக்கிறது. 

5 /5

கேரன்சின் கேபினில் பயணிகளுக்கு அதிக இடம் கிடைக்கிறது. இது 7 பயணிகளுக்கு ஏற்றது.