ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கும். எந்த ஒரு நபரின் பிறந்த நேரத்திற்கு ஏற்ப, அவரது ஜாதகத்தில் ஆதிக்க செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலும் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
மிதுன ராசிக்காரர்கள் புதனின் ஆதிக்கம் காரணமாக அறிவார்ந்த திறன் தொடர்பான வேலைகள் அனைத்திலும் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். வெற்றிக்காக இரவும் பகலும், உண்ணாமல் உறங்காமல் உழைக்கிறார்கள்.
கன்னி ராசிக்கார்கள் ஞானக் கடவுளான புதனால் ஆசி பெற்ற இந்த காரணத்தினால், தனது அறிவார்ந்த திறனின் வலிமையால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கிறார்கள். மிகுந்த ஆர்வம் மற்றும் ஈடுபாட்டின் காரணமாக, இவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து சிறப்பாக தெரிகிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமானவர்கள். அவர்களின் உறுதியான குணம் தொழிலில் வெற்றிகளை குவிக்க உதவுகிறது.
கும்ப ராசிகளுக்கு சனியின் பாக்கியம் உண்டு. உறுதியாக செயல்படும் திறன் கொண்டர்வர்கள். விடாமுயற்சியும் ஆர்வமும் வெற்றியை அடைய பெரிதும் உதவுகின்றன. இவர்களுக்கு தோல்வி என்பதே பிடிக்காது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)