Today Horoscope: இன்றைய நாள் உங்கள்ள்ளுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான நற்பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Daily Raasipalan In Tamil: இன்று (புரட்டாசி மாதம், 15 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) குரோதி வருடம். நல்ல நேரம் காலை 7:45 முதல் 8:45 வரை, மாலை 4:45 முதல் 5:45 மணி வரை. சூரிய உதயம் 6 மணி இரண்டு நிமிடம். சூரிய லக்னம் கன்னி. உத்திரம் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இன்றைய நாள் உங்கள்ளுக்கு மிக ஒரு அற்புதமான நாளாக இருக்கும். மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மறை எண்ணங்கள் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். விரைந்து முடிவெடுப்பீர்கள். பணியை மகிழ்ச்சியுடன் விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சியின் மூலம் பணியில் முன்னேற்றம் காணக்கூடிய நாள். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் கடின உழைப்பை நம்புங்கள். உங்கள் துணையிடத்தில் இணைந்திருந்து மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு காலகட்டம். இன்று பணவரவு காணப்படும். ஆரோக்கிய பிரச்சனை எதுவும் இருக்காது.
இன்று தன்னம்பிக்கை குறைந்து காணக்கூடிய நாள். உங்கள்ளுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிது அவசியம். இன்று மனதில் குழப்பம் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று தடைப்பட்ட தடைகள் நிறைந்து காணக்கூடிய ஒரு நாள். உங்களுக்கு வளர்ச்சியை பாதிக்கும். கடினமான சூழ்நிலைகள் இருப்பதால், மனம் குழப்பம் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிட சூழல் நல்ல முறையில் இருக்காது. உங்கள் துணையிடத்தில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனைத் தவிர்ப்பது அவசியம். அதிக பணவரவு காணப்படக்கூடிய நாள். அதேநேரம் செலவுகள் குவிந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களால் பயணம் அடைந்து நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். பணிகளில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல் நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு மகிழ்ச்சி தரும் வகையில இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆரோக்கியத்தில் எந்தவிதமான ஒரு குறைபாடும் இருக்காது.
இன்று அமைதியின்மை காணப்படும். இன்றைய செயல்களை நன்றாக சிந்தித்து நீங்கள் கவனமுடன் முடிவெடுத்து செய்ய வேண்டும். இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். நேர்மறை எண்ணத்தை பராமரிக்க வேண்டும். நிதிநிலை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் துணையிடத்தில் பிரச்சனை ஏற்படலாம். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.
இன்று உங்களுடைய முன்னேற்றம் அதிக அளவில் காணக்கூடிய ஒரு நாள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரின் பாராட்டு கிடைக்கக்கூடிய ஒரு நாளாக இன்று அமையும். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்.உங்கள் துணையிடத்தில் நல்ல ஒரு புரிந்துணர்வு காணப்படும். இதனால் இருவருக்கும் இடையே உறவுப்பிணைப்பு வலுபடக்கூடியதாக இருக்கும். பணம் வரவு குறைவாக இருக்கும். உங்களுக்கு செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று சற்று மந்தமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் பதட்டத்தில் இருந்து விடுபடலாம். பணியைப் பொறுத்தவரை சற்று சரிவு நிலை காணப்படும். இன்று அதிக பொறுப்புகள் கையாளுவதன் காரணமாக சில வசதிகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். ஆன்மீக விஷயங்களுக்காக நீங்கள் செலவு செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறப்பான நாளாக இருக்கு. கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாத நிலை ஏற்படலாம். திடீரென பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது.
இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அனைத்து செயல்களிலுமே குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடத்தில் சிறந்த முறையில் இருப்பீர்கள். அவருடன் கலந்து யோசிப்பீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் மனவலிமை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும். நிதி சம்பந்தமான விருப்பங்கள் நிறைவேறும். அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று வலுவான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். இதன் மூலம் வெற்றி கிடைக்கக்கூடிய நாள். கடின உழைப்பு மூலம் உறுதி மூலம் வெற்றி கிடைக்கும். கடினமான பணிகளை நீங்கள் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணக்கூடிய நாள். நிதிநிலைமை போதி அளவு காணப்படும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம், இதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி காரணமாக இன்று நீங்கள்ள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
இன்று சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டும். இசை கேட்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணியை மேற்கொள்ளும் பொழுது சில போராட்டங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதில் பிரச்சனைகள் காணப்படும். உங்கள் துணையிடத்தில் கவனமாக பேச வேண்டும். பதட்ட உணர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்துல கவனம் தேவை.
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலுமே வெற்றி கிடைக்கக்கூடிய நாள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணியில் திருப்திகரமான பலன்கள் காணக்கூடிய நாள். உங்களுக்குள் இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்த தரமாக பணியாற்ற வேண்டிய நாள். உங்கள் துணையிடத்தில் அன்பு வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்லுறவு காணப்படும். இன்று அதிக பணம் வரவு இருப்பதால், நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியத்துல கவனம் செலுத்த வேண்டியது நல்லது. யோகா மற்றும் தியானம் மேற்கொண்டால் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.