மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்

Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Guru Peyarchi Palangal: ஏப்ரல் 17 ஆம் தேதி அதாவது நாளை ராமபிரானின் பிறந்த நாளான ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பம்சம் வாய்ந்த நாளில் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி கிருத்திகை நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். அதன் பிறகு சில நாட்களிலேயே, அதாவது மே மாதம் 1 ஆம் தேதி, அவர் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். நாளை நடக்கவிருக்கும் குருவின் நட்சத்திர பெயர்ச்சி மற்றும் அதன் பிறகு மே 1 அன்று நடக்கவுள்ள குரு பெயர்ச்சி காரணமாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு அட்டகாசமான பலன்களும் சிலருக்கும் சுமாரான பலன்களும் கிடைக்கும். 12 ராசிகளிலும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

2 /13

ரிஷபம்: குரு ரிஷப ராசியில் தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயம், திருமண வாழ்வில் மகிழ்ச்சி, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களின் போது கவனம் தேவை. 

4 /13

கடகம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தல கடக ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பயண வாய்ப்புகள் கூடும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5 /13

சிம்மம்: குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். சேமிப்பது கடினமாகலாம். குடும்பத்தில் சச்சரவுகள், உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

6 /13

கன்னி: உத்தியோகத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

7 /13

துலாம்: துலா ராசிக்கார்ரகளுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் வியாபாரத்தில் சில தடைகள் வரக்கூடும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும், சில நாட்களில் அவர் சரியாகும். உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி தாக்கத்தால் உத்தியோகத்தில் சிரமங்கள், பண இழப்பு, உடல்நலக் குறைகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தாரின் பரிபூரண ஆதரவு இருக்கும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. கல்வியில் வெற்றி, தொழிலில் லாபம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் வரலாம். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சில பலவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

11 /13

கும்பம்: உங்கள் தொழிலில் சில நிலையற்ற தன்மை, குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நெருக்கடி வர வாய்ப்புள்ளது. 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களின் உடல்நலம் மேம்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் எற்படும். நிதி நிலை நன்றாக இருக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி, சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.