Heart Attack: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் ‘சில’ உணவுகள்!

இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. 

நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

1 /4

இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம் இதுபோன்ற சில செயல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தினமும் செய்து வருகிறோம், அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. 

2 /4

இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக, இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகம் இருப்பவர்கள், அதிக அளவில் சாப்பிடாமல் சிறிது விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். இறைச்சியை உட்கொள்வதால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது . இப்படிப்பட்ட நிலையில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

3 /4

பால் பொருட்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிலர் பால் பொருட்களை மிக அதிக அளவில் சார்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை கொழுப்பு அதிகம் உள்ளவை. பால் பொருட்களும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். எனவே  கொழுப்பு அதிகம் உள்ள சீஸ் போன்ற பால் உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

4 /4

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் சிக்கன் சாப்பிடக்கூடாது. அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேட்டினை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கன் பிரியர்கள் அதிலிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனை பிற்காலத்தில் அதிகரிக்கலாம்.

Next Gallery