கேது பெயர்ச்சியினால் நெருக்கடியில் ‘சில’ ராசிகள்!

ராகு கேது பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக,  மகிழ்ச்சிகரமானதாக மாற்றக் கூடியது. அதே சமயம் ராகு - கேது பெயர்ச்சிகள் சில ராசிகளின் வாழ்க்கையை புரட்டி போடக் கூடியதாகவும் இருக்கும். பிற கிரகங்களை போலவே, ராகு கேது கிரகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில்,  ராசி மாறுகிறது. தற்போது துலாம் ராசியில் அமர்ந்துள்ள நிலையில், 2023 வரை இந்த ராசியில் தங்கி இருக்கும். இவ்வாறு துலாம் ராசியில் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு மிக நெருக்கடியான காலகட்டமாக இது இருக்கும்.

1 /4

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு-கேது, நிழல் கிரகங்களாகவும் அசுபமான கிரகங்களாகக் கருதப்படும் நிலையில், சில சூழ்நிலைகளில் அவை மிகவும் நல்ல பலன்களையும், சில சூழ்நிலைகளில் அவை மோசமான பலன்களையும் அளிக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக,  மகிழ்ச்சிகரமானதாக மாற்றக் கூடியது. அதே சமயம் ராகு - கேது பெயர்ச்சிகள் சில ராசிகளின் வாழ்க்கையை புரட்டி போடக் கூடியதாகவும் இருக்கும். 

2 /4

மீனம்: இந்த ராசிக்காரர்கள் அடுத்த 4 மாதங்களில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது வைரஸ் தொற்று ஏற்படலாம். சில மோசடிகளால் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படலாம். உங்களை நிரூபிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதிக பேராசை கொள்வதைத் தவிர்த்து, உங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது நிம்மதியான வாழ்வைத் தரும்.

3 /4

மகரம்: இந்த வருட இறுதியில் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடலாம். சொத்தில் முதலீடு செய்வீர்கள். ஆனால் அதில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் சக ஊழியர்களிடம் உங்களைப் பற்றி எதிர்மறையான உணர்வு இருக்கும். எனவே நிதானத்துடன் செயல்பட்டு இந்த கடினமான கடினமான கால கட்டத்தை, மன உறுதியுடன், அமைதியுடன் கடக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள். ஆனால் அது மூழ்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

4 /4

துலாம்: இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் சச்சரவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர சண்டை சச்சரவுகள் அதிகரித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவார்கள். காதல் உறவுகள் பாதிக்கப்பட்டு, பிரியும் சூழ்நிலை ஏற்படும். இந்த நேரத்தில், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். நீங்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். வீட்டில் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும்.  வெளியில் கடன் வாங்க வேண்டி நிலை ஏற்படலாம்.