கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்க உதவும் சிறந்த காலை உணவுகள்

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. உடல் பருமன், இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். காலை உணவில் சில சிறப்பு விஷயங்களை சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். இதை பற்றி இங்கே காணலாம். 

1 /8

உணவு முறை ஆரோக்கியமாக இல்லையென்றால் அது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது பல இதய பிரச்சனைகளுக்கு காரணமாகும். உயர்ந்த கொலஸ்ட்ரால் அளவு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க காலை உணவில் நாம் உட்கொள்ளக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

முழு தானிய சாண்ட்விச்: காலை உணவாக முழு தானிய சாண்ட்விச் சாப்பிடுவது ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது. இதன் மூலம் உடலுக்கு அதிக நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இது எடை இழப்புக்கும் நல்லது.

3 /8

பாதாம் பால்: பாதாம் பால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் அதிகம் உள்ளன. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

4 /8

வேர்க்கடலை: வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

5 /8

பருப்பு வகைகள்: பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. இவற்றைக் கொண்டு செய்யப்படும் காலை உணவுகளும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

6 /8

தயிர்: தயிர் புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும், இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். இது வயிற்றுக்கும் நிறைவான உணர்வை அளிக்கின்றது.

7 /8

ஓட்ஸ்: ஓட்ஸ் இதயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலையில் ஓட்ஸ் உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது அதிகமாக நார்ச்சத்தை கொண்டுள்ளதால் இது காலை உணவிற்கு ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான மண்டலத்தில் இருக்கும் எல்டிஎல் கொழுப்புடன் பிணைக்கிறது. இதன் காரணமாக உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ரால் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.