மஞ்சள் பற்களால் பிரச்சனையா? இப்படி செஞ்சு பாருங்க, பற்கள் பளபளக்கும்

Teeth Whitening: சில காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறினால், சிரிப்பதற்கு கூட நாம் வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், பற்களில் கறை படிந்தவர்கள் கவலை கொள்ள வேண்டம். உங்கள் புன்னகையை மிளிரச் செய்ய பல வீட்டு வைத்தியன்ங்கள் உள்ளன. உங்கள் பற்களின் பளபளப்பைத் திரும்பப் பெறுவதற்கான மிக எளிதான வழியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /5

இந்த செய்முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பிரஷ் செய்யவும். இது உங்கள் பற்களின் பளபளப்பை மீண்டும் கொண்டு வரும். எலுமிச்சையுடன் பேக்கிங் சோடாவையும் கலக்கலாம்.  

2 /5

ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, பிரஷ் மூலம் பற்களில் தேய்க்கவும். படிப்படியாக, உங்கள் பற்களின் மஞ்சள் நிறம் மறைந்துவிடும். தண்ணீர் இல்லாமல் அதை பயன்படுத்தும் தவறை கண்டிப்பாக செய்யாதீர்கள். ஏனெனில் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். இந்த முறையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3 /5

வைட்டமின் சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தின் தோலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆரஞ்சு தோலை பற்களில் தேய்த்தால் பற்கள் சுத்தமாகும். இது தவிர, தோலில் உள்ள அமிலப் பொருளும் உங்கள் பற்களை பலப்படுத்தும்.

4 /5

வெதுவெதுப்பான நீரில் உப்பைப் போட்டு கொப்பளித்தாலும், உங்கள் பற்கள் சுத்தமாகி, ஈறுகளில் ஏற்படும் தொற்றில் இருந்து விரைவில் விடுபடலாம்.

5 /5

பழுத்த ஸ்ட்ராபெர்ரியை நசுக்கி பற்களில் தேய்த்தால் போதும், பற்களின் மஞ்சள் நிறம் போய்விடும். இதைச் செய்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு  முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)