அஸ்தமனம் ஆகும் செவ்வாய்... நிதி நெருக்கடியில் சிக்க போகும் ‘5’ ராசிகள்!

BAD Effects of Bhudhan Ast: கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனம் ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

செவ்வாயின் பலமற்ற தன்மையால் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு அதன் அசுப பலன் அதிகபட்சமாக இருக்கும். 

1 /7

செவ்வாய் அஸ்தமனம்: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செவ்வாய் செப்டம்பர் 24 அன்று கன்னி ராசியில் அஸ்தமிக்கப் போகிறது. கன்னி ராசிக்கு அதிபதி புதன், புதனுக்கும் செவ்வாய்க்கும் பகை உண்டு. இப்படிப்பட்ட நிலையில் செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமனம் செய்யும் போது அவருடைய திறன் குறையும். 

2 /7

மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, செவ்வாய் இந்த ராசியின் ஆறாவது வீட்டில் அஸ்தமிக்கிறார். நீங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் அதிருப்தியும் அடைவீர்கள். நீங்கள் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இது வணிகத்திற்கு ஆபத்தான காலமாக இருக்கும். 

3 /7

ரிஷப ராசிக்கு 5ம் வீட்டில் செவ்வாய் அஸ்தமனம் ஆகிறார். வேலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், தொழில் மற்றும் வேலையில் மாற்றம் குறித்து பல எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும்.  உங்கள் மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் இருக்காது. கடின உழைப்பு இருந்தும் உங்களால் அதிகம் சம்பாதிக்க முடியாது. 

4 /7

சிம்ம ராசிக்கு 12ம் வீட்டில் செவ்வாய் அஸ்தமனம் ஆகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் விரும்பிய பலன்களைப் பெற மாட்டார்கள். கவலைகள் அதிகரிக்கும். இதனுடன், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வேலை இடமாற்றம் ஏற்படலாம். அதனால் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

5 /7

கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தனம் ஆவதால், இந்த காலகட்டம் இந்த ராசி வியாபாரிகளுக்கு சவாலாக இருக்கும், மேலும் இந்த நேரத்தில் உங்கள் பொறுமையும் சோதிக்கப்படும். இது தவிர பல இழப்புகளை சந்திக்க நேரிடலாம். இந்தக் கஷ்டங்களை கவனமாகச் சமாளிக்கவும், அபாயங்களைக் குறைக்கவும் புதிய உத்திகளை நீங்கள் வகுக்க வேண்டும்.

6 /7

தனுசு ராசிக்காரர்களுக்கு 5 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமைகிறார். கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. இந்த காலகட்டத்தில், எந்தவொரு செயலிலும் வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது தவிர, பணியிடத்தில் அதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.