ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்த 7 பேர்... ஆனால் இந்திய அணியில் இடம் இல்லை!

ZIM vs IND: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் வாய்ப்பு தள்ளிப்போயுள்ள இந்த 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

  • Jun 25, 2024, 17:18 PM IST

ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை 5 டி20 போட்டிகளில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் குறித்து இதில் காணலாம்.

1 /8

சாய் சுதர்சன்: இடது கை தொடக்க வீரரான சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2024 ஐபிஎல் தொடரில் 527 ரன்களை அடித்தார். ஒட்டுமொத்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களில் ஆறாவது இடத்தை பிடித்தவர். இருப்பினும், இன்னும் இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை.  

2 /8

வெங்கடேஷ் ஐயர்: இவரும் இடது கை பேட்டர்தான். கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். தொடக்கம், மிடில் என எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாட வைக்கலாம். வேகப்பந்துவீச்சு இவரிடம் கூடுதல் பலன். இருப்பினும், இவருக்கும் இப்போது வாய்ப்பளிக்கவில்லை.   

3 /8

ரஜத் பட்டிதர்: இந்திய அணி ஓடிஐ மற்றும் டெஸ்ட் அணியில் விளையாடிவிட்ட இவர் இன்னும் டி20இல் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை. 2024 ஐபிஎல் சீசனில் 395 ரன்களை குவித்தார். இருப்பினும், இந்த முறை இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.     

4 /8

திலக் வர்மா: மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 2024 தொடர் முழுவதும் சொதப்பினாலும் ஒரு இடது கை பேட்டராக மிடில் ஆர்டரில் சிறப்பாக ரன்களை குவித்து வந்த இவருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டி20 அணியில் முக்கிய இடத்தை பிடித்த இவர் தற்போது கழட்டிவிடப்பட்டுள்ளார். 

5 /8

ஹர்ஷித் ராணா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருந்த இவர் இந்த தொடரில் மட்டும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இவரின் சிறப்பான பந்துவீச்சே இறுதிப்போட்டியில் கேகேஆர் அணிக்கு வெற்றிக் கனியை பறித்துக்கொடுத்தது. இருப்பினும் இவருக்கான வாய்ப்பு தற்போது தள்ளிப்போயுள்ளது.   

6 /8

வருண் சக்ரவர்த்தி: இந்திய அணி 6 டி20 போட்டிகளை விளையாடிய இவர், 2021 நவம்பர் மாதம்தான் கடைசியாக சர்வதேச அளவில் விளையாடினார். இந்தாண்டு கொல்கத்தா அணியில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியதால், இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நமக்கும் மட்டுமில்லை அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 32 வயதான அவர் இதுகுறித்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.   

7 /8

நடராஜன்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவருக்கு ஜிம்பாப்வே தொடரில் கூட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஐசிசி தொடருக்கும் வாய்ப்பு இல்லை, ஜிம்பாப்வே தொடருக்கும் வாய்ப்பு இல்லை என்றால் எப்போதுதான் இனி நடராஜன் இந்தியாவுக்காக விளையாடுவார்.   

8 /8

அறிவிக்கப்பட்ட இந்திய அணி: சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.