சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை பாடாய் படுத்தும்: சூதானமா இருங்க மக்களே!!

Shani Vakri Effects: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு முக்கிய இடம் உள்ளது. சனியின் சிறிய மாற்றங்கள் கூட அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் சில நாட்களில் சனி பகவானின் வகர் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ​​ஜூன் 17, 2023 இரவு 10.48 மணிக்கு, கும்ப ராசியிலேயே அவர் வக்ர பெயர்ச்சி ஆகவுள்ளார். மேலும் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து அவர் திரிகோண ராஜயோகத்தை உருவாக்குவார்.
1 /7

சனி வக்ர பெயர்ச்சி: நவம்பர் 4ம் தேதி வரை சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். வேத ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்ம பலன் மற்றும் நீதிக்கு காரணமாக கருதப்படுகிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார்.

2 /7

ராசிகளில் தாக்கம்: சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பல பிரச்சனைகளை எதிகொள்ளக்கூடும். மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /7

மேஷம்: சனியின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கப் போவதில்லை. சனியின் சஞ்சாரம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் செய்யும் வேலை கெடும். உங்கள் வேலையில் பல தடைகள் வரலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக நிதி இழப்பும் ஏற்படலாம். இதன் காரணமாக, மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாதங்கள் உங்கள் நிலைமையை மோசமாக்கலாம்.

4 /7

கடகம்: கடக ராசிக்காரர்கள் தற்போது சனியின் தாக்கத்தில் உள்ளனர். இந்த வக்ர நிலை காரணமாக உங்களுக்கு மிகவும் அசுபமான விளைவுகள் ஏற்படும். சனி உங்கள் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக, நீங்கள் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்திலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.

5 /7

துலாம்: சனியின் வக்ர நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை அதிகரிக்கும். இது உங்கள் பணியிடத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ​​இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியமும் கெடலாம்.

6 /7

கும்பம்: ஜோதிடத்தின் படி, சனி பகவானின் வக்ர நிலை கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீங்கள் உடல் மற்றும் மன வேதனையை சந்திக்க நேரிடும். உங்கள் தொழிலில் சில தடைகளையும் சந்திக்க நேரிடும்.

7 /7

சனியின் வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க அனுமனை வழிபட வேண்டும். பைரவரை வழிபடுவதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். சனிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.