சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.

Sani Vakra Peyarchi Palangal: வரும் ஜூன் 29ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த நேரத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் வெற்றியை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு சனியின் அருளால் பலன் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், கூடிய சீக்கிரம் பண வரவு அதிகமாகும்.

2 /13

ரிஷபம்: ரிஷப ராசியின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சனி. சனி வக்ர பெயர்ச்சியால் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வியாபாரிகள் அதிக போட்டியை எதிர்கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் சேமிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். 

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ஆனால், சில பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். குடும்ப சூழலில் சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம். வேலையில் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். பணியிடத்தில் உங்கள் மரியாதை குறையலாம் மற்றும் உங்கள் கடின உழைப்பு கவனிக்கப்படாமல் போகலாம். வீட்டில் பிரச்சனைகளால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை வரலாம்.

4 /13

கடகம்: கடக ராசிக்கு சனிப் பெயர்ச்சி பல பெரிய பலன்களைத் தரும். கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்ச்சி பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அற்புதமான நன்மைகள் ஏற்படும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அன்பும், அமைதியும் இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

7 /13

துலாம்: சனி வக்ர பெயர்ச்சியால் துலா ராசிக்காரர்கள் பணியிடத்தில் சவால்களை சந்திப்பீர்கள். உங்களிடம் நிதிநிலை மோசமாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானமும் அமைதியும் இருந்தால், பல பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். 

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசியின் மூன்றாவது மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி சனி. சனிப்பெயர்ச்சியின் போது உங்கள் குடும்பத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் தொழிலில் முன்னேறினாலும், நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிப்பதால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பயணத்தின் போது உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்.

9 /13

தனுசு: சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை கொண்டு வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலையும் மேம்படும். பணி இடத்தில் அனுகூலமான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

10 /13

மகரம்: சனி வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருப்பது முக்கியம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

11 /13

கும்பம்: கும்ப ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி பல வித நன்மைகளை கொண்டு வரும். வேலை தெடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும், அதனால் பொருளாதார நிலை மேம்படும். 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.