Biggboss 6 Tamil: ’ஜிபி முத்து தான் ஜெயிப்பார்’ ரசிகர்களின் அட்ராசிட்டி

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து நிச்சயம் வெற்றி பெறுவார் என அவரது இணைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 /6

யூ டியூப் மற்றும் டிக்டாக், இன்ஸ்டாகிராமில் வைரலாக இருப்பவர் ஜிபி முத்து. கொரோனா காலத்தில் வீட்டில் வேலையில்லாமல் இருந்தபோது பொழுது போக்கிற்காக பாடல் பாடி, அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.  

2 /6

அவரின் பதிவுக்கு இணையத்தில் நாளுக்கு நாள் அமோக வரவேற்பு கிடைத்து தமிழகத்தின் யூ டியூப் ஸ்டாராக வளர்ந்தார்.  

3 /6

பிளாக்ஷீப் உள்ளிட்ட யூ டியூப் நிறுவனங்கள் அவருக்கு விருது கொடுத்தும் கவரவித்துள்ளனர். கடந்த ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.  

4 /6

ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தமுறை முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்.  

5 /6

அவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிய ரசிகர்கள், ஜிபி முத்துவின் விளையாட்டு எப்படி இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.  

6 /6

ஜிபி முத்து எப்படி விளையாடினாலும் அவரை வெற்றி வைப்பது மட்டுமே எங்களுடைய இலக்கு என கங்கணம் கட்டிக் கொண்டு தயாராக இருக்கின்றனர்.