முளை கட்டிய ப்ரோக்கோலியின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்

முளை கட்டிய ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இது பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது. ப்ரோக்கோலி முளைகளில் உள்ள சல்போராபேன் கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது. எனவே முளை கட்டிய ப்ரோக்கோலியில் இருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் என்ன்வென்று பார்ப்போம்.

 

 

1 /6

அழற்சி எதிர்ப்பு பண்பு குடல் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

2 /6

முளை கட்டிய ப்ரோக்கோலியில் அதிக அளவு சல்போராபேன் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. முளை கட்டிய ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் மூளை பக்கவாதம், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களில் இருந்து விடுபடுத்துவதாக நம்பப்படுகிறது.

3 /6

முளை கட்டிய ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது, இது கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.

4 /6

முளை கட்டிய ப்ரோக்கோலியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்போராபேன் உள்ளது, இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சல்ஃபோராபேன், எச் பைலோரிக்கு எதிரான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வயிறு தொடர்பான நோய்களை அகற்ற முளை கட்டிய ப்ரோக்கோலி உதவியாக இருக்கும்.

5 /6

உங்கள் தினசரி வழக்கத்தில் முளை கட்டிய ப்ரோக்கோலி ஜூஸ் ஐ சேர்க்கலாம். 

6 /6

சாலட் அல்லது சூப் வடிவில் முளை கட்டிய ப்ரோக்கோலி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை சாண்ட்விச்களில் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர, பழங்கள் அல்லது காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றில் கலந்தும் சாப்பிடலாம்.   (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)