சிம் வேணுமா... 90 நிமிடங்களில் டோர் டெலிவரி... ஆர்டர் போடுவது எப்படி?

BSNL Sim Door Step Delivery: உங்களுக்கு பிஎஸ்என்எல் சிம் உடனடியாக தேவைப்படுகிறது என்றால் நீங்கள் இப்போது அதனை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அதுவும் 90 நிமிடங்களில்... அது எப்படி என்பதை இதில் காணலாம். 

  • Jun 06, 2024, 19:26 PM IST

ஏர்டெல் மற்றும் ஜியோ சிம்களை வாங்க அவரவர் செயலிகள் மூலமாகவே நீங்கள் ஆர்டர் செய்யலாம் என்றாலும் பிஎஸ்என்எல் சிம்மை Prune செயலியில் மட்டுமே உங்களால் பெற முடியும். 

 

1 /8

Prune செயலியின் மூலம் நீங்கள் ஆர்டர் செய்து தற்போது பிஎஸ்என்எல் சிம்மை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

2 /8

இது 90 நிமிடங்களில் உங்களின் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படும். Prune செயலியில் பிஎஸ்என்எல் மட்டுமின்றி ஜியோ மற்றும் ஏர்டெல் சிம்களையும் நீங்கள் வாங்கலாம். ஏர்டெல், ஜியோ சிம்களை நீங்கள் அவரவர் செயலியில் வாங்கலாம். ஆனால், பிஎஸ்என்எல் சிம்களை நீங்கள் Prune செயலியில் மட்டுமே வாங்க முடியும்.  

3 /8

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் Prune செயலியை தேடி, அந்த செயலியை மொபைலில் தரவிறக்கம் செய்யுங்கள். உங்கள் மொபைல் எண் மற்றும் OTP-ஐ பயன்படுத்தி அதில் லாக்-இன் செய்யவும்.  

4 /8

​முகப்புத் திரையில், Buy Sim பிரிவின்கீழ் இந்தியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். சிம் வகையைத் தேர்வு செய்யவும். அதாவது ப்ரீபெய்டு சிம் வேண்டுமா அல்லது போஸ்ட்பெய்டு வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும். 

5 /8

பின்னர் இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது புதிய இணைப்பு அல்லது உங்கள் எண்ணை வேறு நிறுவனத்தின் இணைப்புக்கு மாற்றுவதை தேர்வு செய்யவும்.  

6 /8

அதன் பின் Confirm என்பதை உறுதி செய்யவும். மேலே உள்ள ஆப்ஷன்களில் BSNL என்பதை தேடவும். அதில் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் பெறக்கூடிய அனைத்து திட்டங்களையும் பார்க்கலாம். அதில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.  

7 /8

ஆதார், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆதாரங்களுக்கான உங்கள் முகவரி மற்றும் ஆவணம் உட்பட உங்கள் விவரங்களை அதில் கொடுக்கவும். தொடக்க கட்டத்தில் ரீசார்ஜிற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். பின்னர் உங்கள் சிம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்.  

8 /8

வெறும் 90 நிமிடங்களில் சிம் டெலிவரி ஆகும். இருப்பினும், இது உங்களின் இருப்பிடத்தைப் பொறுத்தும் மாறுபடலாம். தற்போது, ​​குர்கான், ஹரியானா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் சிம் டெலிவரி கிடைக்கிறது. இருப்பினும், இது கூடிய விரைவில் இந்தியா முழுவதும் கொண்டுவரப்படும் என தெரிகிறது.