புத்தாண்டு முதல் இந்த ராசிகளின் மீது சனியின் பார்வை, ஜாக்கிரதை தேவை

Shani Rashi Parivartan January 2023: ஜனவரி 17, 2023ல் சனி கும்ப ராசிக்குள் இடப் பெயர்ச்சி ஆகுகிறார். கும்ப ராசிக்கு சனியின் வருகையால் பலருக்கு கஷ்டங்கள் அதிகரிக்கலாம். இந்த பட்டியலில் உங்கள் ராசி இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

2023 புத்தாண்டு தொடங்க இன்னும் சில ஒரு மாதம் மட்டுமே உள்ளன. அதன்படி ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசியில் சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. கும்ப ராசிக்கு சனியின் வருகையால் ஐந்து ராசிக்காரர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வருகிற 2023 புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /5

கடக ராசி: ஜனவரி 17, 2023 முதல், சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அஷ்டம சனியாக இருக்கும். இதனால் கஷ்டங்கள் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  

2 /5

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அர்த்தாஷ்டம சனியில் தாக்கம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சோம்பேறித்தனம் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை.

3 /5

மகர ராசி: ஏழரை சனியின் மூன்றாம் மற்றும் கடைசி பகுதி ஆகும். இதனால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நிதி, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  

4 /5

கும்ப ராசி: கும்ப ராசியிலேயே சனியின் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனியின் உச்சத்தில் இருக்கிறீர்கள். கும்ப ராசிக்கு அதிபதி சனி கிரகம். இதனால் தாக்கம் குறைவாக இருந்தாலும் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும்.  

5 /5

மீன ராசி: மீன ராசிக்கு சனி பெயர்ச்சியுடன், ஏழரை சனியின் முதல் பாகம் தொடங்க உள்ளது. மேலும் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். இதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.