சிம்மத்தில் அஸ்தமனம் ஆகும் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்..!

அஸ்தமனம் ஆகும் சுக்கிரன்: ஆகஸ்ட் 3 அன்று, சுக்கிரன் கிரகம், சிம்மத்தில் அஸ்தமனம் ஆகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் வக்ர நிலையிலான இயக்கத்தில் அஸ்தமனம் ஆவது அசுபமாக கருதப்படுகிறது.

நம் அனைவரின் வாழ்க்கையிலும் பணம், பொருள் வசதிகள் மற்றும் காதல் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படும் நிலையில், மிதுனம், துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் சுக்கிரன் அஸ்தமனம் செய்யும் போது கடினமான நேரங்களை சந்திக்க நேரிடும். 

1 /7

ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் வக்ர நிலையிலான இயக்கத்தில் அஸ்தமனம் ஆவது அசுபமாக கருதப்படுகிறது. பணம், பொருள் வசதிகள் மற்றும் காதல் ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படும் நிலையில், சுக்கிரனின்  அஸ்தமனத்தினால் வாழ்க்கையில் திடீர் பணப் பற்றாக்குறை ஏற்படலாம், மறுபுறம் உங்கள் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். சுக்கிரன் அஸ்தமனத்தினால், எந்த 5 ராசிக்காரர்கள் தனது ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் அறிந்து கொள்ளலாம்.

2 /7

மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரன் அஸ்தமனம் ஆவதால் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். இந்த நேரம் தொழில் மற்றும் காதல் வாழ்க்கை இரண்டிற்கும் சாதகமாக இல்லை. மூன்றாம் நபரால் காதல் உறவுகளில் கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். செலவினங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். உங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்வதற்கு முன் யோசியுங்கள்.

3 /7

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11வது வீட்டில் அஸ்தமனம் ஆகிறார். இதன் விளைவாக, உங்கள் உறவினர்களுடன் ஏதாவது ஒரு சண்டை நடக்கலாம். மேலும் நீங்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இந்த நேரம் நிதி விஷயங்களுக்கும் சாதகமாக இல்லை. குடும்பத்தில் உள்ள சில நெருங்கிய நபர்களுடனான உங்கள் உறவும் இதற்கிடையில் பாதிக்கப்படலாம். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

4 /7

துலாம் ராசியில் சுக்கிரன் 10ம் வீட்டில் அஸ்தமனம் ஆகிறார். எனவே இந்த நேரத்தில் உங்கள் உடல்நலம் விஷயத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பல வகையான அசுப விளைவுகளை காணலாம். எந்த காரணமும் இல்லாமல் பிரச்சினைகள் ஏற்படலாம். தாயின் உடல்நிலை  பாதிக்கக்கூடும், அவருடனான உங்கள் உறவும் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் குலைந்து போகலாம். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடனான உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.  

5 /7

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அஸ்தமனம் ஆவது சாதகமாக இல்லை, எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். நிதி விஷயங்களில் கூட, இந்த நேரத்தில் நீங்கள் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாக, உங்களின் சில முக்கியமான வேலைகளும் தடைபடலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறாததால் மனதில் கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பம் மற்றும் மாமியார்களுடனான உங்கள் உறவும் மோசமடையக்கூடும். 

6 /7

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் அஸ்தமனம் ஆகிறார். கல்வி மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே இதன் பொருள். காதல் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். கல்வித்துறையில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். உயர்கல்விக்காக முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு திடீர் தடைகள் வரலாம். இந்த நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், நீங்கள் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.