Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்த பேச்சுக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. இப்போது விதிகள் அறிவிக்கப்படும், அப்போது அறிவிக்கப்படும் என சொல்லி, சொல்லி இன்னும் விதிகளை (IPL Retention Rules) ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தபாடில்லை. இந்தச் சூழலில் அவ்வப்போது வெளிவரும் சில தகவல்கள் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. அதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தக்கவைக்க இருக்கும் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கடந்த 2024 சீசனில் சிறப்பாக விளையாடி வந்தாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி 5ஆவது இடத்தில் நிறைவு செய்தது. இதனால், 2025 சீசனில் தோனி மீண்டும் வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அப்படியிருக்க, தொடர்ந்து ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்து பல அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தொடர்ந்து வெளி வரும் சூழலில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்தும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்போகும் அந்த 5 வீரர்கள் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
ருதுராஜ் கெய்க்வாட்: தோனி இவரிடம் கேப்டன்ஸியை கொடுத்தபோதே அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே இவரை சுற்றிதான் தனது எதிர்கால திட்டங்களை வகுத்திருக்கும். அப்படியிருக்க அதிகபட்ச தொகையில் ருதுராஜ் கெய்க்வாட்டை (Ruturaj Gaikwad) தக்கவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மதீஷா பதிரானா: சிஎஸ்கே இவரை இன்னும் 5 வருடத்திற்கு நிச்சயம் விடுவிக்காது. மும்பைக்கு எப்படி மலிங்கா இருந்து கோப்பைகளை வென்று கொடுத்தாரோ அதேபோல் சிஎஸ்கேவை மேலும் சிகரத்திற்கு ஏற்றும் வல்லமை பதிரானாவிடம் (Matheesha Pathirana) இருப்பதால் இவரையும் நிச்சயம் சிஎஸ்கே தக்கவைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
ரவீந்திர ஜடேஜா: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் சிஎஸ்கேவின் தளபதியை தக்கவைக்காமல் விடுவார்களா என்ன... முக்கிய வீரரான ஜடேஜாவையும் (Ravindra Jadeja) பெரிய தொகையில் சிஎஸ்கே தக்கவைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவம் தூபே: மிடில் ஆர்டரில் சிஎஸ்கே எதிர்பார்க்கும் அதிரடியும், அவ்வப்போது பந்துவீசும் திறனமும் இருப்பதால் ஹர்திக் பாண்டியாவை போல் நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இவரை வளர்க்க சிஎஸ்கே திட்டமிடும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது ஷிவம் தூபே (Shivam Dube) தக்கவைக்கப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எஸ் தோனி: ஆம்... 2025 சீசனில் தோனி (MS Dhoni) விளையாடுவது ஏறத்தாழ உறுதிதானாம்... அதேபோல் ஏலத்தின் விதிகளும் சரிப்பட்டு வரும் காரணத்தால் இன்னும் 1 சீசன் (?) தோனி விளையாட இருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே, கடைசி வீரராக தக்கவைக்க சிஎஸ்கேவும் தோனியும் பரஸ்பரம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.