உடல் பருமன் முதல் ஹார்மோன் பிரச்சனை வரை... வெறும் வயிற்றில் சீரக நீர் செய்யும் மாயங்கள் பல

காலையில் காபி - டீ குடிக்கும் பழக்கத்தை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். இருப்பினும்,  அதற்கு பதிலாக, வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி உங்கள் நாளைத் தொடக்கினால், கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 

சீரக நீர் குடிப்பதால் கொலஸ்ட்ரால் முதல் பிபி, சுகர் லெவல் மற்றும் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது  வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பையும் கொலஸ்ட்ராலையும் எரிக்கும் ஆற்றல் கொண்டது.

1 /8

சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: சீரகத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. மேலும் தினசரி தேவைப்படும் நார்ச்சத்தில், நான்கில் ஒரு பங்கு சீரகத்தில் உள்ளது. இது தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே இந்த சீரக நீர் பல நோய்களுக்கு ஒரு சஞ்சீவி ஆகும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2 /8

உடல் பருமன்: காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், அதிக அளவு கலோரிகள் எரிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, உண்ணும் உணவின் ஊட்டச்சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.

3 /8

ஹார்மோன் பிரச்சனை:  ஹார்மோன் சமநிலையில் இல்லாததால் ஏற்படும் நோய்கள் அதிகம். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஹார்மோன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய் முதல் தைராய்டு வரை பல்வேறு வகையான நோய்கள் தாக்க ஆரம்பிக்கும்.  இந்த நிலை மாற சீரக நீரை வெறும் வயிற்றில் அருந்துவது பலன் தரும்.

4 /8

நீரிழிவு நோய்: சீரக நீர் பருகுவது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் காபி -  டீக்கு பதிலாக சீரக நீர் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரை நோய்க்கு சீரக நீர் அருமருந்து.

5 /8

கொலஸ்ட்ரால்: சீரக நீர் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் மிகவும் உதவியாக இருக்கும். கொழுப்பை எரிப்பதன் மூலம் மாரடைப்பை ஏற்படுத்தும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

6 /8

செரிமான ஆரோக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குட்பை செல்லலாம். ஜீரண சக்தி வலுப்படுவதால், வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

7 /8

சீரக நீர் தயாரிக்கும் முறை: சீரக நீர் தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றவும்  அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, அதை வடிகட்டி அதில் எலுமிச்சை மற்றும் தேன் கலக்கவும். இந்த டீயை தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு அருமருந்தாக செயல்படுகிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.