DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்பு

DA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

DA Hike For Tamil Nadu Government Employees: ஜூன் 11 தேதியிட்ட அரசாணையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏ உயர்வு (DA Hike) உத்தரவு ஜனவரி 1 2024 முதல் அமலுக்கு வரும். 

1 /8

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

2016க்கு முந்தைய ஊதிய விகிதங்களின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) ஜனவரி 1, 2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016க்கு முந்தைய அரசின் ஊதிய விகிதங்களின் அடிப்படையில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்த முடிவு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.  

3 /8

ஜூன் 11 தேதியிட்ட அரசாணையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏ உயர்வு (DA Hike) உத்தரவு ஜனவரி 1 2024 முதல் அமலுக்கு வரும். அதாவது ஜனவரி 1, 2024 முதல் ஊழியர்கள் 239% அகவிலைப்படியை பெறுவார்கள். 

4 /8

அகவிலைபப்டி அதிகரிப்புக்கான உத்தரவில், தமிழக அரசு டிஏ நிலுவைத் தொகையும் அளிக்கப்படும் என கூறியுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான அரியர் தொகை மின்னணு கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தி தற்போதுள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையில் மூலம் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளட்து. 

5 /8

முன்னதாக மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. மார்ச் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்தது.

6 /8

அகவிலைப்படி 50% ஆனதால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தார்கள். இந்த அதிகரிப்பின் காரணமாக அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2587.91 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

7 /8

மத்திய அரசு ஊழியர்களும் ஜனவரி 2024 முதல் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இது ஜூலை முதல் 4-5% அதிகரிக்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

8 /8

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைகின்றது.