இந்த ஐந்து உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு விஷமாகும்

High Sugar Foods : நீரிழிவு நோயாளிகளுக்கு, இனிப்பு பொருட்கள் விஷத்துக்கு சமானம். ஏனெனில் சர்க்கரை நோய் வரும் போது இனிப்பு உணவுகளை சாப்பிட்டால் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாடின்றி ஏறத் தொடங்கும். இதனால் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் சிலரால் உணவு, தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதை கட்டுபடுத்த முடிவதில்லை. இதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சாப்பிட ஆரம்பிக்கின்றனர். எனவே நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றிய தகவலை பிரபல இந்திய ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் தெரிவித்துள்ளார். அதை என்னவென்று பார்ப்போம்.

1 /5

நம்மில் பலருக்கு பாலுடன் சாக்லேட் சிரப் சேர்க்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இந்த நடைமுறை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சாக்லேட் பாலில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே அதிலிருந்து விலகி இருப்பது நல்லது.   

2 /5

தயிர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சமீப காலமாக சந்தையில் ஃபலேவர்டு தயிர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தயிர் இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகிறது.

3 /5

காபியில் காஃபின் இருப்பதால் அதிகமாக காபி குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

4 /5

ஃபிரெஷ் பழங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் சில பழங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை வேகமாக உயர்த்தும். அந்த வகையில் மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது.

5 /5

உணவின் சுவையையும் அதிகரிக்க, அதில் தக்காளி சாஸ் சேர்க்கப்படுகிறது. கெட்ச்அப்பின் சுவை நம்மை அதிகம் ஈர்க்கிறது. ஆனால் இது பெரும்பாலும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்டது. இது குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.