இயற்கையாக கிடைக்கும் சில உணவுப்பொருட்களில் கூட நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு தகுதியில்லாத சில உணவு பொருட்கள் உள்ளது.
இனிப்பு வகைகளில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது இது உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது. அதனால் அதிகளவு இனிப்பு சேர்க்கப்பட்ட பேஸ்ட்ரிகள், கேக்குகள், ஸ்வீட்ஸ், சாக்லேட்டுகள் போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.
அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகள், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை உயர ரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் தவிர்த்துவிடுவது சிறந்தது.
டப்பாக்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் நிறுத்த வேண்டும். அதில் பிபிஏ அல்லது பிஸ்பினால் போன்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது, இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
காலை நேர உணவாக அரிசி போன்ற சில வகை தானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் முழு ஓட்ஸை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் அந்த தானிய வகைகளில் சிரியதளவு சர்க்கரை உள்ளது, அதனால் அது காலை உணவுக்கு ஏற்றதல்ல.
திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், அத்திப்பழம், செர்ரி போன்ற பழங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளது, இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக நாவல் பழம், பேரிக்காய், சாத்துக்குடி, ஆப்பிள், பீச் பழம் மற்றும் பிளம்ஸ் போன்ற பழங்களை சாப்பிடலாம்.