மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.

 

1 /6

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.   

2 /6

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.   

3 /6

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி உள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.   

4 /6

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி உள்ளது. ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

5 /6

இந்த ட்ரைலரில்,'' இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா... போன்ற சுவாரஸ்ய காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  

6 /6

சுவாரசியமான கற்பனை கதை - சர்வதேச தரத்திலான படமாக்கம் - மாஸான காட்சிகள் - கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் - மயக்கும் பின்னணி இசை... என 'கல்கி 2898 AD' பிரமிக்க வைக்கிறது.