மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு

7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.  இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.

7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி/ஜூலை மாதங்களில்) அகவிலைப்படி மத்திய அரசால் திருத்தப்படுகிறது. ஜனவரியில் DA 4% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50%-ஐ எட்டியது. 

1 /9

மத்தியில் பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசாங்கத்திடமிருந்து பல எதிர்பார்ப்புகள் மக்களுக்கு உள்ளன. குறிப்பாக நிலுவையில் உள்ள பல பணிகள் இனி விரைவாக முடிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.   

2 /9

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. தொழிலாளர் அமைச்சகம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவை வெளியிட்டுள்ளது. இதில், அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ (CPI-IW) 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4ஐ எட்டியுள்ளது. ஆகையால். ஜூலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரிய பரிசை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2024 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

3 /9

ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி/ஜூலை மாதங்களில்) அகவிலைப்படி மத்திய அரசால் திருத்தப்படுகிறது. ஜனவரியில் DA 4% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50%-ஐ எட்டியது. 

4 /9

அடுத்தது ஜூலை 2024 இல் டிஏ உயர்வு (DA Hike) இருக்கும். இது ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவைப் பொறுத்து இருக்கும். ஏப்ரல் வரை இதன் மதிப்பெண் 139.4 ஐ எட்டியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டிஏ மதிப்பெண் 51ஐ நெருங்கியுள்ளது.

5 /9

மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இவையும் வந்தவுடன்தான் ஜூலை மாதத்தில் டிஏ (DA) எவ்வளவு அதிகரிக்கும் என்பவார தெளிவாகும். ஜூன் மாதத்திற்குள் DA மதிப்பெண் 53ஐத் தாண்டினால், 3 முதல் 4% வரை கண்டிப்பாக அகவிலைப்படி அதிகரிக்கும். அதாவது மொத்த அகவிலைப்படி 53% அல்லது 54% ஆக உயர்கும். இதன் மூலம் ரூ.10,000 வரையிலான சம்பள உயர்வு இருக்கும். 

6 /9

அகவிலைப்படி54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.50000 எனில், அதில் 4% அதாவது 2000 டிஏ அதிகரிக்கும், அதாவது ஜூலை மாத சம்பளத்தில் அகவிலைப்படியாக ரூ.2000 உயர்வு கிடைக்கும்.

7 /9

சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளத்தில் 3% அதிகரிப்பு செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கருதினால், ஜூலையிலும் 3% சம்பள உயர்வு இருக்கும். ஒருவரது சம்பளம் ரூ. 50000 ஆக இருந்தால், 3% அதிகரிப்பில் ரூ.1500 கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,500 மற்றும் அகவிலைப்படி அதிகரிப்பு என மொத்தம் ரூ.3,500 அதிகரிக்கும்.

8 /9

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் நன்னடத்தை விதிகள் முடிவடைந்த பிறகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணை அலுவலகமான தொழிலாளர் பணியகம், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகளை புதுப்பித்துள்ளது. பிப்ரவரிக்கான CPI-IW 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 ஆக இருந்தது. மார்ச் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 ஆக இருந்தது. ஏப்ரல் 2024க்கான அகில இந்திய CPI-IW 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக உள்ளது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.