ஏர்போர்ட்டில் தப்பி தவறியும் கூட இந்த உணவுகளை வாங்காதீர்கள்!

உங்கள் உடல்நலன் கருதி விமான பயணம் மேற்கொள்ளும்போது விமான நிலையத்தில் சில உணவுப்பொருட்கள் வாங்கி உண்ணுவதை தவிர்த்துவிடுங்கள்.

1 /5

விமான பயணம் செய்யும்போது பச்சை கீரைகள் நிறைந்த சாலட் ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம். ஆனால் சாலட்களில் அதிக கிருமிகள் இருப்பதாகவும், இது ஃபுட் பாய்சன் ஆகிவிடக்கூடும் என்று சிடிசி அறிவுறுத்துகிறது. கீரைகளை கழுவினாலும் அதன் மேற்பரப்பில் கிருமிகள் ஒட்டியிருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது அதனால் பயணத்தின் போது அவற்றை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

2 /5

விமான பயணத்திற்கு முன்னர் சூடான காபி அருந்த சிலருக்கு ஆசையாக இருக்கும், ஆனால் அதனை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற காஃபின் நிறைந்த பானங்கள் அதிக நீரிழப்பை ஏற்படுத்துகிறது, இதனால் பயணத்தின் போது காபி அருந்துவது உங்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துவதோடு அடிக்கடி பாத்ரூம் செல்ல வைத்துவிடும்.

3 /5

அதேபோல அதிக உப்பு நிறைந்த உருளைக்கிழங்கு சிப்சுகள் மற்றும் ப்ரெட்ஸ்ல்ஸ்களை விமான பயணத்தின் போது உண்ணுவதை தவிர்க்கவேண்டும். விமானம் உயர பறக்கும்பொழுது அங்கு காற்றழுத்தம் குறைகிறது, அந்த சமயம் இதுபோன்ற உணவுகளை உண்பது வயிறு சம்மந்தமான உபாதைகளை ஏற்படுத்தி விடுகிறது.

4 /5

பீர், வைன், காக்டெய்ல் போன்ற பானங்களை அருந்துவது சிலருக்கு மகிழ்ச்சியை அளிக்கும், ஆனால் இது பாதிப்பை ஏற்படுத்தும். பயணத்தின் போது காற்றழுத்தம் குறைவதன் விளைவாக தலைவலி ஏற்படுகிறது. இதனால் விமான பயணத்தை நம்மால் முழுமையாக ரசிக்கமுடியாமல் போய்விடலாம்.

5 /5

மேலும் அதிக சர்க்கரை கலந்த தயிர் ருசியானதாக தெரிந்தாலும் அவை விமான பயணத்திற்கு உகந்தது அல்ல, இதில் டன் கணக்கில் சர்க்கரை கலந்திருக்க வாய்ப்புள்ளது. இது உடலுக்கு தீங்கை விளைவிப்பதோடு உங்களை அசாதாரணமாக உணர வைக்கிறது. பயணத்தின் போது பழங்கள் நிறைந்த ஸ்மூத்திகளை கூட சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.