2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. உலக மக்கள்தொகையில் 93 சதவிகிதத்தினர் அந்தந்த நாடுகளில் விதிக்கப்பட்ட லாக்டவுனால் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புத்தாண்டில் அந்த நிலை மாறும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதுடெல்லி: குடிமக்களுக்கான பயண சுதந்திரத்திற்கு ஏற்ப நாடுகளின் பாஸ்போர்டுகளுக்கு தரவரிசைப்படுத்துகிறது ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index (HPI)). இந்த தளம் உலகின் 199 பாஸ்போர்டுகளின் தரவரிசையை வழங்குகிறது. விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படும். 2021 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் எவை தெரியுமா?
#1 ஜப்பான்: 191 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், ஜப்பானே பட்டியலில் முதலிடம் பிடித்து சிறந்த பாஸ்போர்ட் ஜப்பானின் பாஸ்போர்ட் என்ற பெயரைப் பெற்றுள்ளது
#2 சிங்கப்பூர்: 190 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், சிங்கப்பூர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஏப்ரல் நான்காம் தேதி முதல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவித்தது சிங்கப்பூர்
#3 தென்கொரியா, ஜெர்மனி: 189 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், தென்கொரியாவும், ஜெர்மனியும் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
#4 இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின், லக்சம்பெர்க்: 188 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின், லக்சம்பெர்க் ஆகியவை நான்காம் இடத்தை பிடித்துள்ளன
# 5 டென்மார்க், ஆஸ்திரியா: 187 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா ஆகியவை பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
# 6 சுவீடன், பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல்: 186 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், சுவீடன், பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன.
# 7 அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், நார்வே, சுவிட்சர்லாந்து: 185 இடங்களுக்கு தடையின்றி பயணிக்கலாம் என்பதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளன.தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தடையின் கீழ், தற்போதைய உத்தியோகபூர்வ குறியீட்டில் ஏழாவது இடத்தில் இருந்த போதிலும், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் மெக்ஸிகோ 159 என்ற குறியீட்டுடன் 25ஆம் இடத்தை பிடித்துள்ளது. உருகுவே 153 என்ற குறியீட்டுடன் 28ஆம் இடத்தை பிடித்துள்ளது.
# 8 செக் குடியரசு, கிரீஸ், மால்டா, நியூசிலாந்து: 184 இடங்களுக்கு தடையின்றி பயணிக்கலாம் என்பதால், செக் குடியரசு, கிரீஸ், மால்டா மற்றும் நியூசிலாந்து ஆகியவை பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
# 9 கனடா, ஆஸ்திரேலியா: கனடாவும் ஆஸ்திரேலியாவும் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தன. 183 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
# 10 ஹங்கேரி: 182 இடங்களுக்கு சுலபமாக செல்லலாம். எனவே, உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் ஹங்கேரி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.