நாம் தினசரி வீட்டில் பயன்படுத்தும் சில உணவு பொருட்கள் மூலம் உடல் எடையை குறைப்பது தொடங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
எலுமிச்சை நிறைய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. தினசரி தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறைகிறது. மேலும் உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குறைகிறது. வீக்கத்தை குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.
பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகிறது. இவற்றில் வைட்டமின் சி உள்ளதால் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சூடான நீரில் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். மேலும் உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது முதல் செரிமானத்தை மேம்படுத்துகிறது வரை பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது.
இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. உடல் எடை குறைப்பு முதல் நச்சுக்களை வெளியேற்றுவது வரை பலவற்றிற்கு உதவுகிறது.
புதினா இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.