மே மாத கிரக பெயர்ச்சிகளால் சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

கிரகப் பெயர்ச்சி மே 2023:  சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார்.  சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். அதேசமயம் இந்த மாதத்தில் புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறை பலன்கள் காணப்படும். இந்த கிரக மாற்றத்தால் மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /7

மே 2ல், சுக்கிரன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்குள் நுழைவதால், செவ்வாயும், சுக்கிரனும் சங்கமமாகும். இதைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி செவ்வாய் கடக ராசியிலும், 15ஆம் தேதி புதன் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கிறார். மே 15 ஆம் தேதியே சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

2 /7

கிரகங்களின் இந்த நிலையில் மே மாதம் பல ராசிக்காரர்களுக்கு உகந்தது தான். ஆனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மே மாதத்தில் பாதிப்புகளை தவிர்க்க, நிதானத்துடன் நடக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில் சில பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.

3 /7

மே மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் மாறுவதால் ரிஷபம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எனவே நீங்கள் உங்கள் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் எடுக்க வேண்டும். மேலும், இந்த மாதம் உங்கள் நிதி வாய்ப்புகளுக்கு சாதகமாக இல்லை. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், உங்கள் தொழில் மிகவும் சாதகமாக இல்லை. அதனால் தான் எந்த முயற்சியையும் கொஞ்சம் கவனமுடன் எடுக்கவும்.  

4 /7

மே மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் ராசி மாற்றத்தால் உடல் ஆரோக்கியத்தில் சாதகமான நிலை இல்லை. அயல்நாடு தொடர்பான வியாபாரம் செய்யும் இந்த ராசிக்காரர்களுக்கு காலம் சற்று சாதகமற்றதாகவே இருக்கும். தொழிலதிபர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும், ஏனெனில், கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக தெரியவில்லை. உங்கள் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையும் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம்.  

5 /7

மே மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக, தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த மாதம் சர்ச்சைகளில் இருந்து சற்று விலகி இருங்கள். இந்த மாதம் ஏதேனும் திருமணம் அல்லது வழக்குகளில் உங்கள் ஈடுபாடு உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். ஒரு சர்ச்சையில் ஈடுபடுவது உங்களுக்கு எதிராக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் கூட இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனுடன், குடும்ப விஷயங்களிலும் கவலை இருக்கலாம்.

6 /7

கும்ப ராசியினருக்கு, மே மாதம் நடக்கவிருக்கும் கிரகப் பெயர்ச்சி பணத்தின் அடிப்படையில் மிகவும் சாதகமாக இருக்காது. இந்த மாதம் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த நிறைய போராட வேண்டியிருக்கும். இந்த மாதம், தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் இல்லை. வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் பயணங்களை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு லாபம் கிடைக்க இந்த மாதம் சாதகமாக இல்லை

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.