சுக்கிரன் ஆடம்பரமான வாழ்வு, செல்வம் மற்றும் இன்பம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 06 ஆம் தேதி ராகு-கேது மற்றும் சனியின் தாக்கத்தில் இருந்து பிரிந்து மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சுக்கிரன் மாறியுள்ளார்.
சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பல சவால்களும் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் வரலாம் என ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சுக போக வாழ்க்கையை தரும் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 6ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றுள்ள நிலையில், இவர்களுக்கு பல சவால்களும் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் வரலாம் என ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
துலாம்: ரிஷப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரத்தினால், துலாம் ராசிக்காரர்கள் பாதகமான பலன்களைக் காணலாம். ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அதிக கவனம் செலுத்த வேண்டும். சுக்கிரனின் சஞ்சாரம் மன உளைச்சலைத் தரும். நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்: ரிஷப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். நீண்ட தூர பயணங்களில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களின் வேலையிலும் சில பிரச்சனைகள் வரலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தை தரப்பிலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவர்களும் சில நஷ்டங்களை சந்திக்க நேரிடும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
தனுசு: சுக்கிரனின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. நீங்கள் அதிகமாக போராட வேண்டியிருக்கும். போட்டியாளர்கள் உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். ஆனால் விரைவில் எல்லாம் சரியாகிவிடும். வாகனம் ஓட்டும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். யாருடனும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது முக்கியம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.