EPFO Wage Ceiling Hike: பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் உயர் ஓய்வூதியம் குறித்து தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Higher Pension: தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் இது குறித்த ஒரு முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் ஓய்வூதியம் கணக்கிட தற்போதுள்ள ரூ.15,000 என்ற ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. இப்போது இந்த வரம்பை அதிகரிப்பதற்கான நேரமாக கருதப்படுகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இது மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் உயர் ஓய்வூதியம் குறித்து தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியத்திற்காக அதிக பங்களிப்புகளைச் செய்ய தொழிலாளர் அமைச்சகம் அனுமதிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்காக, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (இபிஎஸ்-95) இல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தற்போது EPFO உறுப்பினர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் (அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி) EPF கணக்கில் செல்கிறது. நிறுவனமும் அதே அளவு தொகையை இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் செலுத்துகிறது. ஆனால் நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவீதம் இபிஎஸ்-95க்கு செல்கிறது, மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகிறது.
உறுப்பினர்கள் தங்கள் EPS-95 கணக்கில் அதிகப் பங்களிப்பைச் செய்தால், அவர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். எனவே, இபிஎஸ்ஸில் அதிக பங்களிப்பை அனுமதிப்பதற்கான விருப்பங்களை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க, EPS-95க்கு பங்களிக்கவும் ஊழியர்கள் அனுமதிக்கப்படலாம்.
இபிஎஃப் சட்டத்தின் கீழ், செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு இந்தத் திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வாங்கினாலும், 8.33%, அதிகபட்சமாக ரூ.15,000-இல் மட்டுமே ஓய்வூதியப் பங்களிப்பை முதலாளிகள் வழங்க வேண்டும்.
மற்றொரு விதியின்படி, செப்டம்பர் 1, 2014 க்கு முன்னர் ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள், அதாவது பிப்ரவரி 28, 2015 -க்குள், EPFO உடன் புதிய கூட்டு விருப்பத்தைத் தாக்கல் செய்திருந்தால், ஓய்வூதியத் திட்டத்தில் 8.33% பங்களிக்க முடியும்.
தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் இது குறித்த ஒரு முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் ஓய்வூதியம் கணக்கிட தற்போதுள்ள ரூ.15,000 என்ற ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. இப்போது இந்த வரம்பை அதிகரிப்பதற்கான நேரமாக கருதப்படுகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இது மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அது பெரிய நல்ல செய்தியாக இருக்கும். அவர்களது ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.
இது ஊழியர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. அரசு சம்பள வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றினால், மாதந்தோறும் ரூ.2550 கூடுதல் ஓய்வூதிய பலன் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூரவ் தளங்களை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.